புதன், 12 அக்டோபர், 2016

பயணம்
...............
பொதுவாகவே எனது பயணங்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருக்கும்.பெரும்பாலும் முன்பதிவு செய்யப்பட்ட இரயில் பயணங்கள் அல்லது முன்பதிவு

செய்யப்பட்ட பேருந்து பயணங்களாக இருக்கும். பணிநிமித்தம் தினமும் அரை மணி நேரம் ,ஒருமணிநேரம் நகரப்பேருந்து மற்றும் அரசு,தனியார் பேருந்துகளில்

அமர்ந்தோ,நின்றுகொண்டோ பயணிப்பது வேறு.நான் சொல்ல வந்த்து நீண்டதூர பயணங்கள்.இதிலிருந்தே தெரியும் நான் ஒன்றும் அரசியல்வாதியோ ,அதிகார மையமோ

அல்ல ஒரு சாதாரணன் என்பது.
   இரயில் பயணம் என்றால் குறைந்த்து அரை மணி முன்னதாக நிலையத்தில் இருப்பேன்,குடும்பத்தோடு என்றால் இருப்போம்.பேருந்து பயணம் என்றாலும் இவ்வாறே.
ஒரே ஒரு முறை புதுடில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டி சென்னை சென்ட்ரல் முதல் நடைமேடையிலிருந்து புறப்பட்டு நகரத்தொடங்கியிருந்த நேரம் என்னையும்

எனது நண்பரையும் அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனர் நிலமையின் தீவிரம் புரிந்து நகர்ந்துகொண்டிருந்த இரயிலின் அருகேயே நடைமேடையில் ஆட்டோவை செலுத்தி

எங்களை பயணிக்க வைத்தார்.நல்லவேளையாக அது முன்பதிவு செய்யப்பட்ட பயணம்.
     ஆனால் இன்று.....
திருநெல்வேலியிலிருந்து நாமக்கல் செல்லவேண்டும்.மனைவி குழந்தைகளுடன்.
திட்டமிடாத பயணம் என்பதாலும்,தனித்தனியே வந்த்தாலும் வரும்போது காத்திருப்பில் இருந்து உறுதியானதால் வந்து சேர்ந்துவிட்டொம்.
இன்று திரும்பியாக வேண்டும்.ஏனெனில் நாளை மறுநாள் திருப்பதி பயணத்திற்கும்,ஏழுமலையான் தரிசனத்திற்கும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
   நேற்று தக்கல் முன்பதிவு செய்ய முயன்று முடியாமல் போனது. என்னதான் நமது அலுவலகம் என்றாலும் தக்கல் பதிவு என்பது எந்தவித விமர்சனமும் இல்லாமல்

தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிப்பதற்கு சமம் என்று நம் அனைவருக்கும் தெரிந்த்துதானே.
   சரி முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்யலாம் என்று அப்போதைக்கு சமாதானம் செய்து கொண்டேன் .
ஆனாலும் ஆயுதபூஜை விடுமுறை முடிந்த்தால் பொதுபெட்டி பயணமும் யோசனையாகவே இருந்த்து.
நாமக்கல் வழியாக ஒரே வண்டிதான் அதுவும் நாகர்கோவிலிலிருந்து புறப்படுகிறது.அங்கேயே போய் ஏறிக்கொள்ளலாமா என்றுகூட ஒரு யோசனை ஓடியது.ஆனால்

அம்பையிலிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை,அதை நிராகரிக்க தூண்டியது.
   வேறு யோசனையும் தோன்றியது.பயணத்தை கொஞ்சம் முன்னதாக புறப்பட்டு நெல்லையிருந்து திருச்சி செல்லும் இண்டர்சிட்டியில் திருச்சி சென்று அங்கிருந்து

பேருந்தில் சென்று விடலாம் என்று யோசித்து முடிவும் செய்தாயிற்று.
    காலை உணவு முடித்தபின் தாமிரபரணிக்கு சென்று ஒரு நீண்ட குளியல்.காவிரி குளியலுக்கும் தாமிரபரணிக்கும் நிறைய வித்தியாசம்.
   ஒரு வழியாக மதிய உணவு முடித்து மகனின் காரில் புறப்படும்போது மணி 12.45.
இரயில் 2.15க்குத்தான் என்பதாலும்,ஒரு மணி நேரத்தில் நெல்லை போய்விடலாம் என்பதாலும் ஆசுவாசமாகத்தான் இருந்தேன் .
     ஆனால் இரண்டு வணிக நிலையங்களில் ஐந்து நிமிடம்,பத்து நிமிடம் என கழிந்த்தில் நெல்லை நகரத்தை தொட்டபோது இரண்டு மணி.
மனம் கொஞ்சம்போல் சஞ்சலப்பட்டது.
   ஒருவேளை இரயிலை பிடிக்க முடியாவிட்டால்?
பேருந்தில் சென்று விடலாமா?நீண்ட தூரமாயிற்றே,மனம் அலைபாய்ந்த்து .
இரயில் நிலையம் செல்ல மேம்பாலம் கடக்கையில் கண்கள் தன்னிச்சையாக முதலாம் நடைமேடையை பார்க்க,திருச்சி வண்டி நின்றுகொண்டிருந்த்து.
அடுத்த நினைவு, முன்பதிவோ செய்யவில்லை,நேரமோ புறப்படும் நேரம் .பொது பெட்டியில் நான்கு பேருக்கு உட்கார இடம் கிடைக்குமா?தனித்தனியாக கிடைத்தால் கூட

பரவாயில்லை.
ஒரே இருக்கை நிச்சயமாக கிடைக்காது.என்ன ஒரு சுயநலம்?இரயில் நிலையத்தில் இறங்கும்போது மணி 2.10.
மகனின் நண்பர் ஒருவர் பயணச்சீட்டு வாங்க ஓடினார் .போதாத நேரம் பயணச்சீட்டு பழைய நுழைவாயில் அருகே வாங்கவேண்டும். நாங்கள் இருக்கை தேடி இரயிலின் முன்பதிவு

பெட்டிவரை சென்று பார்த்தோம் .ம்ஹூம் !
முன்னாடி போங்கள் இருக்கை கிடைக்கும் என ஒருவர் சொல்ல முன்பகுதிக்கு விரைந்தோம்.
இரயில் புறப்பட ஆயத்தம் என கூவியது.
   எத்தனை நாள் ஐந்து நிமிடம் பத்து நிமிடம் தாமதமாக புறப்படும்.ஆனால் இன்று மிகச்சரியான நேரத்திற்கு புறப்படுகிறதே!மனம் புலம்பியது.
இனி தாமதம் கூடாது,அருகிலுள்ள பெட்டியில் ஏறிவிட்டோம்.இரயில் புறப்பட்டுவிட்டது.
  டிக்கட்.......
குடும்பத்தினரை கிடைத்த இடத்தில் உட்காருங்கள் எனச்சொல்லிவிட்டு வெளியே எட்டிப்பார்த்தேன்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை பயணச்சீட்டு வாங்கப்போன நண்பரை

காணவில்லை.
ஒரு குடும்பத்தினரின் தயவில் ஆளுக்கு ஒரு இடத்தில் இருக்கை கிடைத்தது.
மனதின் அடுத்த அலைவு...
சீட்டு வாங்கப்போனவர் வாங்கியிருப்பாரா?
அப்படி வாங்கியிருந்தால் அது வீண்தானே? நாம் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்கிறோமே...வழியில் சோதனையில்லை்.ஆனால் திருச்சியில் ...? என்ன சோதனை

முருகா,ஒரு நாளும் இப்படி நேர்ந்த்தில்லையே!
அலைபேசி அழைத்தது....
வழியனுப்ப வந்த மருமகள்.மாமா...இரயில் புறப்படும் நேரம் என்பதால் பயணச்சீட்டு வழங்க மறுத்து விட்டார்கள் என்று கூறினாள்.                                

மீண்டும் மனம் அலைபாய.....
     இரயில் நிலைய சோதனையை விட டிக்கட் இல்லாமல் பயணம் செய்கிறோமே என்ற சிந்தனைதான் பெரிதாக  இருந்த்து.
  இதனிடையே பணம் வீனாகவில்லை என்று ஒரு சின்ன சந்தோசம்வேறு.
   சிந்தனையோட்டத்தில் ஒரு பொறி.....
முன்பதிவில்லாத பயணச்சீட்டு ஒரு செயலி மூலம் வாங்கலாம் என்று செய்தி தாள்களில் எப்போதோ படித்தது.நமது செந்தி தாள்களில் அவ்வப்போது உபயோகமான

செய்திகளும் போடுகிறார்கள் போல.
  கூகுள் ஆண்டவரிடம் கேட்டதில் ஆம் அப்படி ஒரு செயலி உள்ளது என்றார்
  உடன் அந்த செயலியை தரவிறக்கி பரிசோதித்தால் அது நகரப்பகுதிகளுக்கு மட்டுமே பயணச்சீட்டு வழங்கும் வசதி கொண்டது.இதுவும் உதவி செய்யவில்லையா?
    என்ன செய்யலாம்... நேரம் பார்த்தேன் ..புறப்பட்ட நேரத்திற்கு இன்னும்சில நிமிடங்களில் மணியாச்சி வந்துவிடும்.....
    சட்டென ஒரு யோசனை...மணியாச்சியில் நின்றவுடன் இறங்கி சீட்டு வாங்கிவிட்டால் ...
வாய்ப்பே இல்லை...நாங்கள் இருந்த்து இன்ஜினிலிருந்து இரண்டாவது பெட்டி.நிலையத்தைவிட்டு வெகுதூரம் முன்னாள் சென்றுதான் இரயில் நிற்கும் இறங்கி ஓடி.  

ம்ஹூம்.  நிற்கும் கொஞ்ச நேரத்தில் ......வாய்ப்பு குறைவு.
   அதோ மணியாச்சி தெரிகிறது என்ன செய்யலாம்....
ரிஸ்க் எடுக்கவேண்டாம் ...திருச்சியில் பார்த்துக்கொள்வோம்....
சிரமத்துடன் மனதை அமைதியாக்க முயன்றேன்..
  அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி ஒலிப்பைத் தொடர்ந்து அழைப்பு.அழைத்தது நெல்லையில் பயணச்சீட்டு வாங்க சென்ற மகனின் நணபர் .
அப்பா ஒரு நம்பர் அனுப்பியிருக்கேன்.அவரிடம் எத்தனாவது பெட்டினு சொல்லுங்க மணியாச்சில டிக்கட் வாங்கியாச்சு உங்களிடம் கொடுப்பார் என்று .